குருபகவான் கால புருஷ தத்துவப்படி ஒன்றாம் வீடான மேஷ ராசியில் அமரப்போகிறார். மேஷ ராசியில் உள்ள ராகு உடன் குரு பகவான் இணையப்போகிறார்.
குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக சிம்மம், ராசியையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியையும் பார்க்கிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெறும் என்பதே உண்மை. அதே போல இந்த குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களும், மிதுன ராசிக்காரர்களும் ராஜாதி ராஜ யோகம் பெறப்போகின்றனர். ஏப்ரல் மாதம் முதல் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகமும் மன நிம்மதியும் தேடி வரப்போகிறது என பார்க்கலாம்.
மிதுனம் லாப குரு
மிதுன ராசிக்கு லாப ஸ்தான குரு வரப்போகிறார். 11வது வீடு சுப ஸ்தானம் ரொம்ப நன்மைகள் நடக்கும். மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு குரு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். மாற்றம் பெருகிறார். செய்யும் தொழிலில் லாபம் வரும். மன அழுத்தம் நீங்கி தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் குருப்பெயர்ச்சி. அஷ்டமத்து சனியால் வியாபாரம் தொழிலில் நஷ்டப்பட்டவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்ப சூழ்நிலைகள் குதூகலமாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சசினைகள் தீரும். குருபகவான் நிறைய லாபத்தை தரப்போகிறார். கடந்த கால சிக்கல்கள் தீரப்போகிறது. வியாழக்கிழமைகளில் அகத்தியரை வணங்க நன்மைகள் நடக்கும்.
சிம்மம் சுபிட்சம் அதிகரிக்கும்
சிம்ம ராசிக்காரர்களே அஷ்டம குருவினால் படாத பாடு பட்ட நீங்கள் இந்த ஆண்டு கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். குரு பகவான் 9ஆம் இடத்திற்கு வரப்போகிறார். பாக்ய ஸ்தானத்திற்கு வரும் குருவினால் உங்களுக்கு நிறைய நன்மைகள் நடைபெறும் பதவியில் முன்னேற்றம் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மிகப்பெரிய யோகங்கள் தேடி வரப்போகிறது. அதிர்ஷ்டமான காலம். குருவின் பார்வையும் உங்களுக்கு கிடைப்பதால் வாழ்க்கையில் சுபிட்சங்களும் நன்மைகளும் அதிகரிக்கும். உங்களின் வீடு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனமும் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருக்கும். பெற்ற அம்மா அப்பாவை வணங்குவதன் மூலம் குரு பகவான் மகிழ்ச்சியடைவார் நன்மைகள் அதிகம் நடைபெறும். திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி வாருங்கள். ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு பணம் கொடுத்து உதவுங்கள். மாதுளை செடி, செம்பருத்திப்பூ நட்டு வைத்து பராமரியுங்கள். துவரம்பருப்பு தானம் கொடுங்க.
துலாம் கல்யாண யோகம் கைகூடும்
துலாம் ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடம் களத்திர ஸ்தானம். குடும்பத்திற்கு நன்மையை கொடுக்கும் ஸ்தானம். குரு பகவானின் பயணமும் பார்வையும் குடும்பத்தில் சந்தோஷத்தை தரப்போகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வரும். குரு பார்வை நேரடியாக துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கிறது. திருமணம் நடைபெறும். ஏழாம் வீட்டில் இருந்து நேரடியாக குரு பார்வையால் இருப்பதால் கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினை தீரும் ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். காதல் மணியடிக்கும் கல்யாணம் கை கூடி வரும். நோய் பாதிப்புகள் நீங்கும். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் சங்கரன் கோவில் சங்கரநாராயணரை வழிபட மேன்மைகள் நன்மைகள் நடைபெறும். திருநங்கைகளுக்கு உதவி செய்யலாம். வயதானவர்களுக்கு தேவையான பொருட்களை புதன்கிழமை உதவி செய்வது நன்மை. துளசி செடி வாங்கி பெருமாள் கோவிலுக்கு சென்று தானம் கொடுங்க. துளசி இலைகளை சாப்பிட உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தனுசு பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும்
தனுசு ராசிக்காரர்களே.. இந்த ஆண்டு ஐந்தாம் இடமான பஞ்சம ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமரப்போகிறார். உங்கஙள ராசிக்கு குருவின் அருள் பார்வை கிடைப்பதால் மிகப்பெரிய நல்ல மாற்றத்தை தரப்போகிறது. எடுத்த முயற்சிகள் வெற்றியில் முடியும். மனோ பலம், உடல் ஆரோக்கியம், பண பலத்தையும் குரு பகவான் தருவார். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். திருமணம், குழந்தைபேறு போன்ற சுப காரியங்கள் நடைபெறும். நினைத்த காரியம் நடக்கும். பதவியில் உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் சம்பள உயர்வும் அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் தருவார் குரு பகவான். தினசரியும் சூரிய பகவானை வணங்க கண் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும்.
மீனம்
மீன ராசிக்கு இரண்டாம் வீடு மேஷ ராசி. தனம், வாக்கு ஸ்தானம், ஜென்ம குரு ராமர் வனத்தில் என்பார்கள். அப்படி கஷ்டப்பட்ட உங்களுக்கு இனிமேல் நிகழ விருக்கும் குருப்பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறார். குடும்ப ஸ்தானத்தில் அமரப்போகும் குரு பகவான் ராகு உடன் இணையப்போவதால் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தும். தன காரகன் தன ஸ்தானத்திற்கு வருவதால் பண வருமானம் கொட்டும். நல்ல வேலை கிடைக்கும். துன்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். சகல சௌபாக்கியங்களையும் தரப்போகிறார் குரு பகவான்.