மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பாக சில சின்ன விஷயங்களை கூட நாம் கவனிப்பது அவசியம். இது சிறிய வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடுவது உயிரையே போக்கும் விஷயமாக கூட மாறிவிடும்.
அப்படிப்பட்ட அறிகுறிகளை காணலாம்.
சிலருக்கு நெஞ்சு பகுதியில் இருக்கும் சாதாரண வலியை அலட்சியமாக கடந்து விடுகின்றனர். நெஞ்சு வலி என்பது அலட்சியப்படுத்தக்கூடிய விஷயமாக எப்போதும் இருக்கக் கூடாது.
மார்பில் ஒரு விதமான இறுக்கமான உணர்வு ஏற்படுவது விரைவில் மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய காரணியாக இருக்கக்கூடும். உடல் பலவீனமாக உணர்வது, மூச்சு விட சிரமப்படுவது, அதிக அளவில் வியர்வை கொட்டுவது உள்ளிட்டவை மாரடைப்பு உண்டாவதற்கு முன் ஏற்படக்கூடிய அறிகுறிகள்.
இதையெல்லாம் நாம் அலட்சியமாக எடுத்துக் கொண்டால் அது மாரடைப்பிற்கு பாதை வகுத்துக் கொடுக்கும். அத்துடன் இடது கை வலி அல்லது இடது பக்கத்தில் மார்பில் வலி ஏற்படுவது கழுத்து தாடை பகுதியில் வலி ஏற்படும். இது நரம்பு எடுப்பதை போல மிக கொடூரமாக இருக்கக்கூடும்.
இதுவும் மாரடைப்பு வருவதற்கு முன்பான அறிகுறி தான். சிலருக்கு தோள்பட்டை, முதுகு பகுதியில் நரம்பு இழுப்பதை போல உணர முடியும்.
இது போன்ற மாரடைப்பு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க உடல் குளுக்கோஸ் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை சரியான அளவில் கவனித்து வர வேண்டும். உடல் பருமன் இல்லாமல் உடலை கவனித்து வருவதும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதும் நல்லது. மது அருந்துவது புகைப்பிடிப்பது உள்ளிட்ட பழக்கங்களை நிறுத்திக் கொள்வது இதயத்தை பாதுகாக்க கூடிய முக்கிய வழிகள்.