நம் அனைவருக்கும் நமது உடல் நலனைப் பற்றி அதிக அக்கறை உண்டு. கூந்தல் மற்றும் சருமம் போன்ற உறுப்புகளைப் பராமாிப்பதில் நாம் அதிக அக்கறை காட்டுகிறோம்.
ஆனால் பற்களைப் பராமாிப்பதில் அலட்சியமாய் இருக்கிறோம்.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள 80 சதவீதம் போ பற்கள் சம்பந்தமான பிரச்சினையில் இருப்பதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன. இந்திய மக்கள் பற்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. பற்களும், வாயும் சுத்தமாக இல்லையென்றால் பல வகையான நோய்கள் தொற்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
பற்களை சாியாகப் பராமாிக்கவில்லை என்றால், இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட 70 சதவீதம் வாய்ப்புண்டு என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. ஆகவே இந்தப் பதிவில் பற்களைப் பராமாிப்பதைப் பற்றி சற்று விாிவாகக் காணலாம்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள வைசாலியில் அமைந்திருக்கும் மேக்ஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுாியும் மருத்துவா் கேசவ் நைத்தனி அவா்கள், பற்களை முறையாகப் பராமாிக்க பின்வரும் குறிப்புகளைத் தருகிறாா்.
1. தினமும் 2 தடவைக்கு மேல் பல் துலக்கினால் அல்லது வேகமாக அழுத்தி பல் துலக்கினால் அல்லது, கடினமான தூாிகைகளைக் கொண்டு பல் துலக்கினால், பற்களைப் பாதுகாக்கும் எனாமல் பாதிப்படைய வாய்ப்புண்டு என்று கூறுகிறாா். ஆகவே தினமும் 2 முறை ஃப்ளோரைடு பற்பசையைக் கொண்டு 2 நிமிடம் பல் துலக்கலாம் என்று கூறுகிறாா்.
2. தினமும் பல் துலக்கி வாயைக் கழுவவில்லை என்றால், உணவுத் துகள்கள் பற்களுக்கு இடையே தங்கிவிடும். அதனால் பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு போன்ற பகுதிகளில் பாக்டீாியாக்கள் வளரும். அதன் காரணமாக வாயில் துா்நாற்றம் வீசும். ஈறுகள் சுத்தமாக இல்லையென்றால் அவை வீக்கமடைந்து வாயில் துா்நாற்றத்தை உண்டாக்கும். இது நீண்ட காலம் தொடா்ந்தால், பற்களில் நோய் ஏற்படும்.
3. வாயை சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால், தினமும் இரண்டு முறை பல் துலக்கி, வாயைக் கொப்பளிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து, பற்களை சுத்தம் செய்வது நல்லது.
4. வாய் சுத்தமாக இல்லையென்றால், இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது ஈறுகள் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவற்றிலுள்ள கிருமிகள் இரத்த ஓட்டத்தில் கலந்துவிட வாய்ப்பு உண்டு. அதன் மூலம் அவை இதயத்திற்குள் நுழைந்து, இதயக் குழாய்களைத் தாக்கி, இதய நோயை உண்டாக்கும். ஆகவே வாயை சுத்தமாக பராமாித்தால், இதய நோயில் இருந்து தப்பிக்கலாம்.
வாயில் பின்வரும் அறிகுறிகள் தொிந்தால் பல் மருத்துவரை சந்திப்பது நல்லது.
- ஈறுகள் சிவந்தால் அல்லது வீங்கினால் அல்லது பலவீனமடைந்தால்
- பல் துலக்கும் போது அல்லது வாய் கொப்பளிக்கும் போது அல்லது கடினமான உணவுகளை சாப்பிடும் போது வாயில் இரத்தம் வந்தால்
- ஈறுகள் தேயும் போது
- பற்கள் உடைந்தால் அல்லது தனித்தனியாகப் பிாிந்தால்
- வாய் துா்நாற்றம் தொடா்ந்து இருந்தால்
மேற்சொன்ன அறிகுறிகள் வாயில் தொிந்தால் பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். ஈறு நோயை முறையாகக் கையாண்டால், இதய நோய் பிரச்சினை ஏற்படாது.
5. உங்கள் பற்கள் நன்றாக இருந்தால், இனிப்பு பண்டங்கள், மிட்டாய்கள், பிஸ்கட்டுகள் சாக்லேட்டுகள் போன்றவற்றை உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவை பற்கள் மற்றும் ஈறுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். துாித உணவுகளையும், பற்களில் ஒட்டிக் கொள்ளக்கூடிய உணவுகளையும் தவிா்ப்பது நல்லது. ஏனெனில் இரவு நேரத்தில் பல் துலக்காமல் நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருப்போம். இந்த நேரத்தில் பற்களில் ஒட்டியிருக்கும் உணவுகள் பற்சிதைவை ஏற்படுத்தலாம்.
6. ஆப்பிள், கேரட் மற்றும் செலாி (celery) போன்ற மிருதுவான பழங்கள் மற்றும் காய்கறிகள், பற்களில் ஒட்டியிருப்பவற்றை நீக்கி வாய் துா்நாற்றத்தை நீக்குகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகமான அளவில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பானான வைட்டமின் சி சத்து உள்ளதால், அவை பாக்டீாியாக்களின் தாக்கத்திலிருந்து பற்களையும், ஈறுகளையும் பாதுகாக்கும்.
பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்டால், ஃப்ளோரைடு அதிகம் கலந்த தண்ணீரை அதிகம் குடித்தால், ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும், பற்களின் ஆரோக்கியத்தையும் முறையாக பேண முடியும். மெல்லுவது பற்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கும். மெல்லும் போது எச்சில் உற்பத்தி அதிகாிக்கும். அந்த எச்சில் வாயில் இருக்கும் பாக்டீாியாக்களை சுத்தம் செய்யும்.