இன்று ஏப்ரல் 4 , பங்குனி 21, செவ்வாய்க்கிழமை.
திதி: திரையோதசி காலை 08.05க்கு பின் வளர்பிறை சதுர்த்தசி.
நட்சத்திரம் :பூரம் காலை 9.36க்கு பின் உத்திரம்.
லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
இராகு காலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எம கண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
குளிகன் : பிற்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சுபஹோரைகள் :
காலை 8 மணி முதல் 9 மணி வரை
பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை
இரவு 7 மணி முதல் 8 மணி வரை
இரவு 10 மணி முதல் 12 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்
இன்று விரயமான நாள். உறவினர்களால் கருத்து வேறுபாடுகள், சிக்கல்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று குழப்பமான நாள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நற்பலன்கள் உருவாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உருவாகும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். காரியத்தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ற பலன் கிட்டும்.
மிதுனம்
இன்று அமோகமான நாள். கொடுக்கல் , வாங்கல் லாபகரமாக இருக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு நிச்சயம். சுபகாரியம் கைகூடும் . புதிய முயற்சிகளில் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை நிச்சயம். மனைவி வழியில் பணவரவு நிச்சயம்.
கடகம்
இன்று அனுகூலமான நாள் . வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் நற்பலன்களை பெறலாம். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் தொழிலில் மேன்மை அடையலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்மம்
இன்று மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுபகாரியம் கைகூடும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். உறவினர்களால் ஆதரவு பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நண்பர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்புக்கள் உயரும்.
கன்னி
இன்று விரயமான நாள். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதால் கடன் பிரச்சனைகளை குறைக்கலாம். உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அலுவலகத்தில் ஆதரவு பெருகும். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். வாகனப் பயணங்களால் காலதாமதம் உருவாகும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
துலாம்
இன்று சீரான நாள். இனிய செய்திகள் இல்லம் தேடி வரும். உடன் பிறந்தவர்களால் ஆதரவு பெருகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும்.
விருச்சிகம்
இன்று திறமைகள் வெளிப்படும் நாள். அலுவலகத்தில் பாராட்டுக்கள், பதவி உயர்வு நிச்சயம். புதிய முயற்சிகளில் திறமைகள் பளிச்சிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறலாம். பொன், பொருட்சேர்க்கை அதிகரிக்கும்.
தனுசு
இன்று நெருக்கடியான நாள். தொழிலில் பணநெருக்கடிகள் ஏற்படலாம். சிக்கனத்தை கடைப்பிடிப்பது உத்தமம். புதிய முயற்சிகளில் உழைப்புக்கேற்ற பலன் கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் பெறலாம். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் பிரச்சனைகளை குறைக்கலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம்.
மகரம்
இன்று மாலை வரை சந்திராஷ்டமம். திடீர் மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுபகாரியம் , புதிய முயற்சிகளை மாலைக்கு பிறகு செய்ய சாதகமான பலன்களை பெறலாம். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும்.
கும்பம்
இன்று மாலை 4மணிக்கு மேல் சந்திராஷ்டமம். காலதாமதம், காரியத்தடை ஏற்படலாம்.சுப காரியம், புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வாகனப் பயணங்களில் எச்சரிக்கை தேவை. உறவினர்களால் சலசலப்புக்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம்.
மீனம்
இன்று சிறப்பான நாள். தொழிலில் லாபம் பெருகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் லாபம் பெருகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். மனைவி வழியில் எதிர்பார்த்த பணவரவு கிட்டும்.