இன்று முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் புதிய மாத தொடக்கத்தில் வங்கி புதிய கட்டணங்களை
அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, வாடிக்கையாளருக்கு இது தெரியாவிட்டால்,
கட்டணச் சுமையை அவரே சுமக்க வேண்டியிருக்கும்.
முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது
வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல்
வங்கி புதிய விதிமுறையை மே 1 முதல்கொண்டு வந்துள்ளது. இதன் மூலம்
வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க நினைப்பவர்கள் ஒன்றை நிச்சயம் தெரிந்து
கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா இல்லையா என்று
ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்று
வங்கி பேலன்ஸை சரிபார்க்காமல் பணம் எடுக்க முடிவு செய்யாதீர்கள்
அதாவது, வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில் ஏடிஎம்மில்
இருந்து பணம் எடுக்க முயற்சி செய்தால், அக்கவுண்டில் குறைந்த பேலன்ஸ்
காரணமாக பரிவர்த்தனை தோல்வியடையும். அப்படி ஆனால் வங்கி உங்களுக்கு 10
ரூபாயும், அதன் ஜிஎஸ்டியையும் சேர்த்து அபராதமாக விதிக்கும்.
தவிர, மற்ற கட்டணங்களையும் அதிகரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி யோசித்து
வருவதாகத் தெரிகிறது. டெபிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டுகளின்
வருடாந்திர கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்படும் என
தெரிகிறது. மேலும், பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம்
செய்யப்படும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படும்.
எனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இவற்றை கவனிக்க
வேண்டும். இல்லையெனில் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.இந்த விவரங்களை
வங்கி தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
மறுபுறம், ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்று உங்கள் கணக்கில் இருந்து பணம்
கழிக்கப்பட்டால், ஒரு வாரத்திற்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்குத்
திரும்பும். இல்லையெனில், வங்கியில் புகார் அளிக்கலாம். ஒரு மாதத்திற்குள்
பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், ரூ. 100 அபராதம் வங்கியால் உங்கள்
அக்கவுண்டுக்கு செலுத்தப்படும்.









