தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில் பணியிடங்கள் காலியாகும் போது அறிவிக்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதன்படி தற்போது திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும். குறிப்பிட்ட தகுதி உள்ளவர்கள் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.hrce.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.









