நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு இந்தத் தடை சிவகங்கை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்து போடப்பட்ட தடை
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு வழங்கியுள்ளது..
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவில் மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.. RTE 2009 படி பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) கட்டாயம். RTE ACT நடைமுறைக்கு வந்த பிறகு , பதவி உயர்விலும் அல்லது நேரடி நியமனம் பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் TET முடித்து இருக்க வேண்டும்.2010 க்கு முன்பு பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றுவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. RTE ஆனது 2009க்கு பிறகு தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என விதி தெளிவாக கூறுகிறது. தற்பொழுது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு TET கட்டாயம் ஆகும். எனவே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர் வழங்க தடை ஆணை வழங்கப்பட்டுள்ளது. தெளிவான செயல்முறைகளை வழங்கிய பிறகு பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கு எண் WP M D No 11278 / 2023.