பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 04.07.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
விளக்கம்:
எவ்வளவு
பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால்
வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.