இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அ.மார்ஸ், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் (2023-24) பல்வேறு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற உள்ள
காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை
வெளியாகியுள்ளது.