மாரடைப்பு(heart attack) மற்றும் இதய செயலிழப்பு(Cardiac Arrest) என்பது சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் திடீரென ஏற்படக்கூடியது. சில மணி நேரமோ அல்லது சில நிமிடங்களுக்கு முன்னதாகவோ ஒரு சில அறிகுறிகள் இருக்கலாம். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் (Cedars-Sinai Medical Center) உள்ள ஸ்மிட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்(Smidt Heart Institute) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் 24 மணி நேரத்திற்கு முன்பே இதய செயலிழப்புக்கான அறிகுறிகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். பெண்களுக்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்பு மூச்சுத்திணறல் இருப்பதாகவும், அதேநேரம் ஆண்களுக்கு நெஞ்சு வலி(Chest pain) ஏற்படுவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.