பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.08.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை
குறள் :246
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
விளக்கம்:
அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்.
பழமொழி :
Better to bend the neck than bruise the forehead.
தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்.