ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்:
தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அரசு சார்பில், மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்) கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர, தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது.
ஆசிரியர் பயிற்சி தேர்வுகளில் தவறிய மாணவர்களுக்கும், அடுத்த ஆண்டே
எழுதும் விதமாக தனித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தனித் தேர்வுகளுக்கான
விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்று விண்ணப்பிக்கும் முறை தற்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஒவ்வொரு ஆண்டும் தனித் தேர்வு எழுதுவோர், அந்தந்த
மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தான்
விண்ணப்பங்களை பெற்று அங்கேயே விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு
விண்ணப்பங்களை பெறுவதில், நடைமுறை சிக்கல்களும், சிரமங்களும் இருந்தன.
இதைபோக்கும் வகையில், தனித் தேர்வு எழுதுவோர், tn.govt.in/dge என்ற
இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பெறலாம். விண்ணப்பத்தில் 1
முதல் 4 ம் பக்கம் வரை விண்ணப்பிப்பதற்கான, அனைத்து விபரங்களும், ஐந்து,
ஆறாம் பக்கத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பின்பற்ற வேண்டிய
அறிவுரைகளும் இடம் பெற்றிருக்கும்.
ஏப்ரல் 18 முதல் 29 ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, ஏப்ரல் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த
மாவட்ட டயட் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்,என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...