மாணவ மாணவியர் சர்வ சாதாரணமாக பள்ளி சீருடையில் கோடை விடுமுறை நாட்களில் இப்போது பள்ளிக்கு சென்று வருகின்றனர்.ஒரு கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களில் மட்டும் பயிற்றுவித்து மாணவர்களின் திறனை சோதிக்காமல்,கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக பாடம் நடத்தி, சிறு சிறு தேர்வுகள் வைத்து மாணவர்களை அதுவும் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் பள்ளியில் சேர்த்து தேர்ச்சி சதவீதத்தை கூறி தம்பட்டமடித்துக் கொள்வது கோமாளித்தனம் மட்டுமன்றி வேறென்ன?இதையே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்ய இயலுமா? விடுமுறை நாளில் ஒரு நாள் சிறப்பு வகுப்பு எடுத்தாலும் குற்றமாக கருதப்படும்.ஆசிரியர்கள் வந்து காத்திருந்தாலும் மாணவ்ர்கள் வருவது இல்லை.பெற்றோரும் அக்கறை எடுத்துக் கொள்வது இல்லை. இவ்வளவிற்கும் தனியார் பள்ளிகளைப் போல இல்லாமல் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஓராண்டே பாடம் நடத்தப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் வரவில்லை என்றாலும் கண்டிக்க முடியவில்லை. நிறைய மாணவர்கள் கிட்டத்தட்ட 2 மாதங்கள் கூட பள்ளிக்கே வராமல் நேராக அரசுப் பொது தேர்விற்கு செல்லும் அவலமும் தொடர்கிறது. இதையெல்லாம் தனியார் பள்ளிகளில் அனுமதிப்பார்களா?அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு....இன்னமும் நாங்கள் தனியார் பள்ளிகள் ஒதுக்கித் தள்ளுகிற ஏழை மாணவர்களுக்குத் தான் கற்பிக்கிறோம். அவர்களது குடும்ப சூழலையும், பொருளாதார சூழலையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கே வரமாட்டேன், கூலி வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும்,செங்கல் சூளை வேலைக்கும் தான் செல்வேன் என அடம்பிடிக்கிற மாணவர்களை, பள்ளிகளுக்கு பெரும்பாலான நாட்கள் வருகை தராத மாணவர்களைத் தான் நாங்கள் முடிந்த அளவிற்கு பயிற்சி அளித்து அரசுத் தேர்வுக்கு அனுப்புகிறோம்.குறைவான அளவே, அவர்களால் படிக்க முடிந்த அளவு எழுத முடிந்த அளவு கொடுத்து, அவர்களை எங்கள் செலவில் நிறைய நோட்டு,பேனா, ஃஸெராக்ஸ், கையேடுகள் மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் அளித்து ஊக்குவித்து கிடைக்கிற வகுப்பறைகளையும், மரத்தடிகளையும் பயன்படுத்தி படிக்க வைக்கிறோம்.