அனைவருக்கும்
இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட
ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3
நாட்கள் நடக்கிறது.மாணவர்களுக்கு
எளிதில் புரியும்வகையில் அறிவியலை கற்பிப்பது, அவர்களை
போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்வது, பள்ளி அளவிலான அறிவியல்
கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கமளிப்பது உள்ளிட்டவை குறித்து இம்முகாமில்
பயிற்சியளிக்கப்படுகிறது. இதற்காக 32 மாவட்டங்கள் கோவை, திருச்சி, நாகை,
தேனி, விருதுநகர் என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
பள்ளி,
கல்லுாரிகளில் நடக்கும் இப்பயிற்சியில், சிறப்பு மற்றும் முதன்மை
கருத்தாளர்கள் (மூத்த ஆசிரியர்கள்) 72 பேர், கருத்தாளர்கள் 264 பேர்
பங்கேற்கின்றனர். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட மாவட்ட உயரதிகாரி
ஒருவர் கூறுகையில், “இப்பயிற்சி பெறுவோர் பின்னர் மாவட்ட பள்ளிகளில்
பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். மாணவர்களின்
அறிவியல் ஆர்வத்தை துாண்டுவதே இதன் முக்கிய நோக்கம்,” என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...