இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றொரு மைல்க்கல்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 24 June 2016

இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றொரு மைல்க்கல்:

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV C34: புதிய சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள்.
PSLV C34 விண்கலம், விண்வெளியில் 10 மடங்கு குறைந்த செல்வில் 20 செயற்கை கோள்களை செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இரண்டு மாணவ செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டன சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் ஒரு செயற்கைக் கோளும், புனே பொறியியல் கல்லூரியின் செயற்கைக் கோளும்தான் அவை. நம் ஏவுகணையில் வெறும் 1 கிலோ எடையுள்ள SWAYAM எனும் இந்திய செயற்கைக் கோளும் பயணிக்கிறது.


1. Cartostat-2 தொடர் விண்கலம் (Cartostat-2 series satellite)(இந்தியா):
இதுதான் இந்த ஏவுகணையில் முதன்மையான செயற்கைக் கோளாகும். பயன்பாடு: வரைபட பயன்பாடு, கடலோர நிலக் கட்டுப்பாடு, சாலை நெட்வொர்க்கிங், நீர் விநியோகம், புவியியல் தகவல் முறைமை பயன்பாடுகள்.
இதன் எடை 727.5 கிலோவாகும். ஏவுகணையிலேயே அதிக எடையுள்ள செயற்கைக் கோள் இதுதான்.

2. LAPAN-A3(இந்தோனேசியா):
இது பூமியைக் கண்காணிக்கும் மைக்ரோ செயற்கைக் கோள்.
இந்த செயற்கைக்கோளின்ண்கா முக்கியமான பயன்பாடு கண்காணிப்பு, நிலப் பயன்பாடு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு.
இதன் எடை 120 கிலோ.

3. M3MSAT (கனடா):
குறைந்த புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வரும் சமிஞைகளை சேகரித்து ஆய்வு செயதலே, 85 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளின் முதன்மையான நோக்கம்.

4. GHGSAT- D (கனடா):
25.5 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளின் தலையாய நோக்கம் பூமியில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் செறிவைக் கண்டறிதலே.

5. BIROS (ஜெர்மனி):
உயர்வெப்ப நிகழ்வுகளின் தொலை உணர்வை (Remote Sensing of High temperature events) அறிவதற்கே இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இதன் எடை 130 கிலோ.

இந்தியா-US நட்புறவைக் குறிப்பதற்காக ISRO, Americaவின் 13 சிறிய செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும். இதில் கூகுளிற்குச் சொந்தமான Tera Bella நிறுவனத்தின் "Earth Imaging Satellite" அடங்கும். 110 கிலோ எடையுள்ள SkySat Gen-2 என்ற இந்த கோளின் இரு முக்கிய அம்சங்கள்:
√sub-meter resolution images
√ high definition video

20 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ. 26 நிமிடத்தில் 20 செயற்கைக் கோள்களும் விண்ணில் சீரிப்பாய்ந்தன. இது குறித்து ISRO chairman கூறுவதாவது, "20 செயற்கைக்கோள்கள் பறவைகள் போல விண்வெளியில் பறந்தன! ஒவ்வொன்றும் விண்ணில் செல்லுத்தப்பட்டதும், ஒன்றோடு ஒன்று சாராமல் தங்களது பாதையில் இலக்கை நோக்கி செயல்பட துவங்கியது என்று குறிப்பிட்டார்..

ஒரே ஏவுகணையில் அதிக செயற்கைகோளைச் செலுத்தும், இந்தியாவின் மிகப் பெரிய முயற்சி இது. ஏப்ரல் 28, 2008ல், உலகிலேயே அதிக அளவு செயற்கைக் கோள்களை (10 செயற்கைக்கோள்கள்) ஒரே ஏவுகணையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது ISRO. 2013ல், America Minotaur-1 என்ற விண்கலம் 29 செயற்கைக் கோள்களை ஒரே ஏவுகமையில் செலுத்தி நம் சாதனையை முறியடித்தது. மீண்டும், 2014ல் ரஷ்யா 37 செயற்கைக்கோளை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது, இந்தியா குறைந்த செலவில் அதிக செயற்கைக் கோளகளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளது.

ISROவின் இந்த புதிய முயற்சி Jeff Bezos மற்றும் Elon Musk ஆகிய பில்லினியர்களின் விண்கல நிறுவனத்திற்கு சவால் விடுவதாக உள்ளது. மொபைல் நிறுவனங்கள், இணைய சேவை மையங்கள் எனப் பல பேரின் தேவையைப் பூர்த்தி செய்ய, முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த இந்த துறை தனியார்மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் குறைந்த செலவில் தங்கள் ஏவுகணைகளை விடுவதால்தான். இந்நிலைக்கு ஒரு சவால் விடுகிறது நம் நாட்டு விஞ்ஞானிகளின் செயல்!

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H