தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்கும்
அரசாணையை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவண்ணாமலையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
தான் அரசு பாலிடெக்னிக் விரைவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்த நிலையில்,
முதுநிலை வரை தமிழில் படித்த தன்னை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கவில்லை
என்றும், எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்குமாறு அரசுக்கு
உத்தரவிடக் கோரியும் செந்தில்குமார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ் வழிக் கல்வியில்
படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% முன்னுரிமை வழங்க வேண்டும்
என்று உத்தரவிட்டு 2010ல் வெளியான அரசாணையை முறையாக பின்பற்ற வேண்டும்
என்று அரசுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, மனுதாரர் செந்தில்குமாரை சான்றிதழ்
சரிபார்ப்புக்கு அழைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...