*வருமான வரி கணக்கு தாக்கல்: 31ம் தேதி கடைசி நாள்*
சென்னை : கடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கான அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது.
கடந்த 2018 - 19க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஏப்ரலில் துவங்கியது. ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி உச்சரவரம்புக்குக் குறைவாக இருந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது கடந்த ஆண்டு முதல் கட்டாயம் ஆகியுள்ளது. இதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது.
வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 2018 - 19ம் நிதியாண்டின் அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ல் முடிகிறது. இதற்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் அபராதம் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர் 1000 ரூபாய், அபராதமும், ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர் டிச. வரை 5000 ரூபாயும், ஜன. முதல் மார்ச் வரை 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படவில்லை. வரி ஆதாயத்திற்கு பின் 2.5 லட்சம் முதல்5 லட்சம் ரூபாய் வருவாய் இருந்தால் 2.5 லட்சத்திற்கு மேல் உள்ள தொகைக்கு வருமான வரி உண்டு. ஆனால் அந்த வரித் தொகையை தள்ளுபடி செய்வதற்கான சலுகை தான் நடப்பு 2019 - 20ம் நிதியாண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...