அரசு பள்ளிகளை கண்காணிக்க கல்வித்துறை அவசர உத்தரவு - தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் உத்தரவு : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

POST HOME AD

Post Top Ad

Tuesday, 13 August 2019

அரசு பள்ளிகளை கண்காணிக்க கல்வித்துறை அவசர உத்தரவு - தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் உத்தரவு :

அரசுப் பள்ளிமாணவர்கள் சாதி சின்னங்களை அணிந்து வருகிறார்களா என கண்காணிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2018ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி பெற்ற அலுவலர்கள் அனுப்பிய கடிதத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் கைகளில் கயிறுகள் மற்றும் ரப்பர் பேண்ட்டுகள் அணிந்துள்ளனர். அவை சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் காவி நிறங்களில் இருக்கின்றன. கைகளில் வளையங்கள் நெற்றியில் திலகங்கள் அணிந்திருக்கின்றனர் இவை சாதியை குறிப்பதாக தெரிகிறது.
விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை தேர்வு செய்யும் போது குறியீடுகள் மூலம் மாணவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதை அறிவிப்பதாக உள்ளது. வகுப்பறையிலும் உணவு இடைவேளைகளிலும் அவர்களை அடையாள படுத்துவதாக இருக்கிறது. இந்த செயல் மாணவர்கள் தங்களுக்குள் சாதியை அறிந்து கொள்ளவும் ஆசிரியர்கள் அறிந்து கொள்ளவும் பயன்படுத்துவதாகத் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அனைத்து கல்வி அதிகாரிகளும் பள்ளிகளில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இதுபோன்ற சாதியை குறிக்கும் செயல்களில் அடையாளப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்களா? எனகண்காணிக்க வேண்டும். சாதி குறியீடுகளை வெளிப்படுத்தும் செயல்களை யாராவது மேற்கொண்டிருந்தால் அதுகுறித்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்து அதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அதற்கு தலைமை ஆசிரியர்களே பொறுப்பு ஏற்க வேண்டும். இது சம்பந்தமான எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இணை இயக்குனருக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு வெளியிட்ட உத்தரவில் கூறியிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad