இந்திய அளவில் வாகனங்கள் முறைதவறி ஓட்டினாலோ, ஹெல்மெட் அணியாமல், லைசன்ஸ் இல்லாமல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் போன்ற பல காரணங்களுக்காக அபராதம் அதிகரிக்கப்பட்டு தற்போது வசூலிக்கப்படுகிறது.
ஆனால் குஜராத்தில் இந்த அபராதங்கள் அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூபாய்.1000 என்பது 500 ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றால் ரூபாய்.1000 அபராதம் என்பதை 100 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி குஜராத் மாநிலத்தில் மட்டும் இது அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் தமிழ்நாட்டிலும் குறைத்தால் மக்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து. ஏனென்றால் தற்போது இருசக்கர வாகனங்களை வெளியில் எடுப்பதைக் கூட மக்களிடம் தயக்கம் உள்ளது.