தமிழ்நாடு திறந்த பல்கலை: பி.எட்., படிப்பிற்கான அறிவிப்பு:
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் வரும்
கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இளங்கலை அல்லது
முதுகலை பட்டப்படிப்பு முடித்து, முழு நேர பணியிலுள்ள ஆசிரியர்களாக 2
வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வி கட்டணமாக ரூ.500ம், தபால் மூலம் பெற ரூ.550ம் வரைவோலை எடுக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 26ம் தேதிக்குள் வந்து சேரும்
படி அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் 25ம் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.








