பின் தங்கிய நிலையில் இருந்ததாகவும், அவற்றின் தரத்தை உயர்த்தவே அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உடனடியாக தேர்வுகள் நடத்தப்படுவது அவர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த உயர்கல்வி துறை அமைச்சர் பழனியப்பன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வகுப்புகளை நடத்த கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் உயர்படிப்பிற்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது எனவும் உறுதி அளித்தார்.
பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
மேலும் மடிக்கணினிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, மடிக்கணினிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் தாமதப்படுத்தியதாலே அனைவருக்கும் ஒரே நேரத்தில் மடிக்கணினிகள் வழங்கமுடியவில்லை என முதலமைச்சர் அவர்கள் விளக்கமளித்தார்.








