சிபிஎஸ்ஈ மாணவர்களுக்கு சட்டக்கல்வி அறிமுகம்:
சிபிஎஸ்ஈ பள்ளியில் பதினொராம் வகுப்பு படிக்கும்
மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் சட்டக் கல்வியை சிபிஎஸ்இ
அறிமுகப்படுத்தியுள்ளது.
2013-2014ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும்
மாணவர்களின் எதிர்கால நலனை கருதி சட்டக்கல்வியை விருப்ப பாடமாக கொண்டு வர
சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இந்த திட்டம் முதல் 20 பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்
பின்னர் படிப்படியாக அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு வரப்படும். சட்டக்
கல்விப் பாடத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்வதற்கு முதலில்
விண்ணப்பிக்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சிபிஎஸ்இ
கூறியுள்ளது.








