உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் சுவடியியல் பட்டய வகுப்பு:
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பட்டய வகுப்புக்கான நுழைவுத்தேர்வு, ஜூன், 15ம் தேதி நடக்கிறது. அதற்கான, விண்ணப்பத்தை, அடுத்த மாத இறுதிக்குள், அனுப்ப வேண்டும்.உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2013 - 14ம் ஆண்டுக்கான, தமிழ் சுவடியியல் பட்டய வகுப்புக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 15ல் நடக்க உள்ளது. இவ்வகுப்பில், சுவடிகளின்
தோற்றம், வளர்ச்சி, பதிப்பு வரலாறு, யாப்பு, பாட்டியல் ஆகியவற்றைப் பற்றி அறியவும், ஓலைச் சுவடிகளை படிக்கவும், படியெடுக்கவும், பதிப்பிக்கவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.








