திருவள்ளூர்: மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான தேசிய இளைஞர் விருதுக்கு, விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.ஆண்டுதோறும், ஜனவரி, 12ம் தேதி, சுவாமி விவேகானந்தரின்
பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும், தேசிய அளவிலான இளைஞர் விழாவில், மத்திய
அரசால் சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக செய்து
வரும், 13 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கும் மற்றும் தன்னார்வ தொண்டு
அமைப்புகளுக்கும், தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
01.04.2012 முதல், 31.03.2013 வரையிலான காலத்திற்கு செய்த
இளைஞர் நலப் பணிகளுக்காக விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி,
இளைஞர்களுக்கான விருது, தனி நபர் ஒருவருக்கு, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு வழங்கப்படும். இப்பரிசு, 25 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். இதற்கு
முன் விருது பெற்றவர்கள், இந்த ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பிக்க இயலாது.
மத்திய, மாநில, பல்கலைக் கழகங்கள் மற்றும் இதர அரசு
நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இந்த விருது பெற விண்ணப்பிக்க தகுதி
கிடையாது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்
பரிசு வழங்கப்படும். குறிப்பிட்ட ஜாதி, சமய அடிப்படையில் தொண்டாற்றிய
நிறுவனங்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்கள் மாவட்ட
விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும்.
வரும், 31ம் தேதிக்குள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து
அனுப்ப வேண்டிய முகவரி, மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர்
பெருந்திட்ட வளாகம், திருவள்ளூர். அலைபேசி: 99403 41482.
இத்தகவலை, மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.