பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கு தேர்வு கட்டணத்தில் முழுவிலக்கு:
இதனால் பார்வையற்ற தனித்தேர்வர்கள் முழு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதினர். இதையடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை குறிப்பிட வேண்டும். பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளை போல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்ட அரசாணை: பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை போல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கண்பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் 2013 செப்டம்பர் முதல் ஆன்லைன் விண்ணப்பத்தில் இடம்பெறும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








