கூட்டுறவு பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்:
அஞ்சல் வழி மூலம் கூட்டுறவு பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இன்று(16ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.15வது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான வகுப்புகள் துவங்கப்படவுள்ளன. இந்த வகுப்பில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் இப்பயிற்சியில் சேரலாம். கல்வித்தகுதி 11ம் வகுப்பு தேர்ச்சி அல்லது புதிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரர் பணிநியமனம் செய்யப்பட்ட
முறைகள் குறித்து குறிப்பிடுதல் வேண்டும். இப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமைகளில்
மட்டுமே நடைபெறும்.
எனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு
பண்டகசாலைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், நெசவாளர்
கூட்டுறவு கடன் சங்கங்கள், மீனவர் கூட்டுறவு கடன் சங்கங்கள் போன்ற அனைத்து
வகையான கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிவோரும் சேரலாம். இந்த விண்ணப்பங்கள்
இன்று(16ம் தேதி) முதல் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு, மேடை தளவாய் குமாரசாமி கூட்டுறவு
மேலாண்மை நிலையம், உதயா நகர், என்.ஜி.ஓ.நியூ.,காலனி, பெருமாள்புரம்,
நெல்லை-7 என்ற முகவரியிலோ அல்லது 0462 2552695, 94427 28248 என்ற எண்ணிலும்
தொடர்பு கொள்ளலாம்.