வெளிநாட்டு கல்வி - சிறப்பான நோக்க அறிக்கை எழுதுவது எப்படி?
உங்களின் படிப்பிற்கான நோக்கம் பற்றி தெளிவாக எழுத்து மூலம் சொல்ல
வேண்டும் என்பதால், நல்ல ஆங்கிலத்தைப் பயன்படுத்தி நோக்க அறிக்கை எழுதுவது
முக்கியம். ஏனெனில் இதன்மூலம் உங்கள் விண்ணப்பத்தின் தலையெழுத்தே
நிர்ணயிக்கப்படுகிறது.இதன்பொருட்டு,ஆலோசகர்களின் உதவியை நாடலாம்.ஆனால், இறுதியாக எழுதப்போவது நீங்கள்தான். தேவைப்பட்டால்,
ஆங்கிலத்தில்
எழுதும் திறனை மேம்படுத்தும் பொருட்டு, பயிற்சி வகுப்புகளுக்கும்
செல்லலாம். சிறப்பான நோக்க அறிக்கையை எழுதும் பயிற்சியை பெரும்பொருட்டு,
சில ஆலோசனைகள் மற்றும் அந்த அறிக்கையின் முக்கியத்துவம் குறித்து இங்கே
கொடுக்கப்பட்டுள்ளன. அவை,
ஒரு மாணவரின் ஆளுமை, எதிர்பார்ப்புகள், நோக்கம் ஆகியவை பற்றிய ஒரு பார்வையை, பல்கலை தேர்வு கமிட்டிக்கு இந்த அறிக்கை வழங்குகிறது.
ஒவ்வொரு பல்கலைக்கும் தனித்தனியே நோக்க அறிக்கை எழுத வேண்டும் அல்லது
ஒவ்வொன்றுக்கும் பொருந்தும் விதமாக, அறிக்கையில் தேவைப்படும் மாற்றங்களை
செய்து கொள்ளலாம்.
அறிக்கையை, நேரடியாக நீங்கள் எழுதுவதுபோலவே எழுத வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாழ்க்கைத் தொடர்பானது.
அறிக்கை மிக நீளமாக இருத்தல்கூடாது. சராசரியாக 500 முதல் 750 வார்த்தைகள் வரை இருந்தாலே போதுமானது.
உங்களின் எதிர்கால லட்சியத்தை விவரித்து, குறிப்பிட்ட பல்கலையில்
படிக்கக்கூடிய அந்த படிப்பு, அதை அடைவதற்கு எந்தளவிற்கு உதவும் என்பதைப்
பற்றி தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் இதுவரை ஈடுபட்டுள்ள extra curricular activities பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும்.
கண்டிப்பாக, இணையதளத்திலிருந்து எதையும் காப்பியடிக்கக்கூடாது. உங்களின்
சொந்த அறிவைக்கொண்டே அதை எழுத வேண்டும். ஏனெனில், இதுபோன்ற
தில்லுமுல்லுகளை தேர்வு கமிட்டியினர் மிக எளிதாக கண்டுபிடித்து
விடுவார்கள்.
உங்களின் முதல் நோக்க அறிக்கை எழுதும் முயற்சி தோல்வியடைந்து, மீண்டும் எழுத நேரிட்டால், அதுபற்றி கவலையடைய தேவையில்லை.
தேவையான விபரங்கள் என்பது மிகவும் முக்கியம். உங்களுக்கு நன்றாக
நினைவில் இருக்கும் முக்கிய சம்பவங்கள் அல்லது நிகழ்வுகளை குறிப்பிடவும்.
உங்களின் பள்ளி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற சில அசாதாரண(நேர்மறையான) சம்பவங்களைப் பற்றி குறிப்பிடலாம்.
சில சிறந்த அகடமிக் கட்டுரைகளைப் படித்துப் பார்த்து, அவற்றின் மொழிநடை
மற்றும் இலக்கணம் ஆகியவற்றை கவனித்து, அதன் அழகான பயன்பாட்டை அவதானித்து,
அதன்மூலம் உங்கள் சிந்தனையை மேம்படுத்தி, சிறப்பான நோக்க அறிக்கை எழுத
முயற்சிக்கவும்.
மேலும், நீண்ட வாக்கியங்களை எழுதாமல், முடிந்தளவு சிறிய
வாக்கியங்களிலேயே எழுத வேண்டும். அப்போதுதான், படிப்பவர் எளிதாக
புரிந்துகொள்ள முடியும் மற்றும் எழுதுகையில் ஏற்படும் இலக்கணப் பிழைகளையும்
எளிதாக தவிர்க்கலாம்.
நோக்க அறிக்கையை எழுதி முடித்தப்பின்னர், ஆங்கிலத்தில் நல்ல புலமையுள்ள
ஒருவரிடம் காட்டி, அதன்மூலம் அதில் ஏதேனும் பிழைகள் உள்ளனவா என்று
சரிபார்க்க வேண்டும்.
இணையதளம் மற்றும் பல்வேறான கேரியர் மேகசின்கள் ஆகியவற்றின் மூலமாக,
நோக்க அறிக்கை எழுதுவதற்கான பல்வேறான தகவல்களைப் பெறலாம். மேலும், SOP
Template -களும் உங்களுக்கு உதவும்.
உங்களின் நோக்க அறிக்கை தெளிவான முறையில் வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
நீங்கள் ஏதேனும் குறிப்புகளைப் பயன்படுத்தினால், தவறாமல், அவற்றுக்கான விளக்கங்களையும் கொடுக்க தவறக்கூடாது.
கவனமாக வார்த்தைகளைத் தேர்வு செய்ய வேண்டும். இதுதான் மிகவும்
முக்கியமானது. அதிகளவிலான adjective -களை பயன்படுத்துவது சிக்கல்களை
உண்டாக்கும்.