முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் "வீடியோ கான்பரன்ஸ்' முறையில் பேசும் திட்டம் துவக்கம்:
பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்'
முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம், நேற்று
முன்தினம் துவங்கியது. துறை செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாதத்திற்கு
ஓரிரு முறை, முதன்மைக் கல்வி அலுவலர்களை சென்னைக்கு அழைத்து கூட்டம்
நடத்துவது வழக்கம்.இதற்காக அவ்வப்போது, முதன்மைக் கல்வி
அலுவலர்கள், சென்னைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைக் கருத்தில் கொண்டு, "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், நேரடியாக இயக்குனர் பேசும் வகையிலான திட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. அரியலூர், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, விழுப்புரம் உள்ளிட்ட, 13 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன், இயக்குனர் ராமேஸ்வர முருகன், திட்ட செயல்பாடு குறித்து பேசினார். இது போன்று, வாரத்திற்கு ஒரு முறை, வாரத்திற்கு, ஐந்து மாவட்டம் என்ற முறையில், திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இயக்குனர் தெரிவித்தார்.

ஆன்-லைன் கலந்தாய்வு : பள்ளி கல்வித் துறையில்,
இருக்கை கண்காணிப்பாளர்களாக உள்ள, 50 பேருக்கு கண்காணிப்பாளர் பதவி
உயர்வுக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியாக நேற்று நடந்தது. பணி மூப்பு தகுதி
வாய்ந்த, 50 பேர் பதவி உயர்வு பெற்றனர். இதுபோன்று, 112 உதவியாளர்கள்,
இருக்கை கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும், ஆன்-லைன் வழியாக
நேற்று நடந்தது.