ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பாவலர்.க.மீனாட்சிசுந்தரம் தலைமையில் நடைபெற்றும் மாபெரும் பட்டினிப்போராட்டம:
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.உண்ணாவிரதப் போராட்டம்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் இலா.தியோடர் ராபின்சன் வரவேற்று பேசினார்.
மாநிலப்பொருளாளர் அம்பை.ஆ.கணேசன் நன்றியுரை கூறினார். இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:-9 அம்ச கோரிக்கைகள்மத்திய அரசுக்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும், பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும். ஆங்கிலக்கல்வியை புகுத்துவதை கைவிட்டு, தமிழ்வழி கல்வியை மேலும் முனைப்போடு செயல்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் வருகைப் பதிவைக் காரணம் காட்டி அரசு பள்ளிகள் எதையும் மூடக்கூடாது என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.இந்த கோரிக்கைகளுக்கு எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட 7 சங்கங்கள் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழுவின் டிட்டோஜேக் போராட்டமாக விரிவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்இந்த போராட்டத்தில் தமிழக தமிழாசிரியர் கழக சிறப்பு தலைவர் சு.நஞ்சப்பனார், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் தி.கண்ணன், பொதுச்செயலாளர் இரா.தாசு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்புத்தலைவர் டி.சுப்பிரமணியன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத்தலைவர் கு.தியாகராஜன், தமிழ்நாடு இடைநிலை மற்றும் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் க.சி.இளம்பரிதி, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் இரா.முத்து சுந்தரம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கப்பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள், மன்றத்தின் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.









