உலகளாவிய சர்வேயில் 100 இடங்களுக்குள் வந்த இந்திய கல்வி நிறுவனங்கள்:
மொத்தம் 22 நாடுகளில் எடுக்கப்பட்ட பிரிக்ஸ் அன்ட் எமர்ஜிங் எகனாமிக்ஸ் ரேங்கிங்ஸ் 2014 என்ற சர்வேயின்படி, முதல் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் வரிசையில், இந்தியாவின் 10 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த சர்வே முடிவுகளின்படி, சீன கல்வி நிறுவனங்கள் ஆதிக்கம்
செலுத்துகின்றன. சீனாவின் 4 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களிலும்,
மொத்தமாக 23 கல்வி நிறுவனங்கள், முதல் 100 இடங்களுக்குள்ளும் வருகின்றன.
சீனாவின் பீகிங் பல்கலைக்கழகம் பட்டியலில் முதலிடத்திலும், ஷிங்குவா பல்கலைக்கழகம் இரண்டாமிடத்திலும் வருகின்றன.
இந்தியாவை எடுத்துக்கொண்டால், பஞ்சாப் பல்கலைக்கழகம், முதல் 100
இடங்களில், 13வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் 6 (IITகள், 30 முதல்
47வது இடங்களுக்குள் வருகின்றன. ஜாதவ்பூர் பல்கலை 47வது இடத்திலும்,
அலிகார் முஸ்லீம் பல்கலை 50வது இடத்திலும் வருகின்றன. ஜவஹர்லால் நேரு
பல்கலைக்கழகம் 57வது இடத்தில்தான் வருகிறது.