விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (16.04.2014) தேர்தல் பயிற்சிவகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பிற்கு கள்ளக்குறிச்சி பகுதியை சார்ந்த ஆசிரியர்களை செஞ்சி,திண்டிவனம் மற்றும் வானூர் பகுதியிலும் , அப்பகுதியில் உள்ளவர்களை கள்ளகுறிச்சி,சங்கராபுரம் ,ரிஷிவந்தயம்போன்ற பகுதியிலும்பயிற்சி கொடுத்தனர். சுமார் 100 கி.மீ தாண்டி ஆசிரியர்களை தேர்தல் பயிற்சிக்கு உட்படுத்தியதால்இந்த கோடை வெப்பத்தில் ஆசிரியர்கள் பெரும்சிரமத்திற்கு உள்ளானார்கள. இதற்கிடையில் இன்னும் இரண்டு பயிற்சிகள் இவ்வாறே நடைபெறும் எனறும் அடுத்த பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு நடைபெறும் என கூறியவுடன்ஆசிரியர்கள் அனைவரும் பயிற்சி வகுப்பை புறக்கணித்து விளையாட்டு திடலில் கூடிஅடுத்த பயிற்சி வகுப்பு இங்கு வேண்டாம் என்றும்,வரும் 23ந்தேதி ஆணையை பெற்று தேர்தல் பணிக்கு செல்கின்றோம் என்றும் கோசமிட்டனர்.உடன் தேர்தல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஆசிரியர்களின்கோரிக்கைஏற்றுக்கொண்டு.
23ந்தேதி பயிற்சிக்கு வர அனுமதித்தனர்.இதனால் அனைத்து ஆசிரியர்களும் மகிழ்ச்சியுடன் பயிற்சி பெற்று மாலை 5மணி அளவில் விடைபெற்றனர்.
கீழே உள்ள படங்கள் செஞ்சி ராஜா தேசிங்கு மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி வகுப்பினை விட்டு வெளியேறி ஆசிரியர்கள் திடலில் கோசமிட்ட காட்சிகள் உங்கள் பார்வைக்கு .