விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் தங்கி
படிக்க, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்" என மாவட்ட
விளையாட்டு அலுவலர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும்,
மாணவ, மாணவிகளுக்கு, விளையாட்டு துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப நல்ல
பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன், சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு
விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சாவூர், சென்னை
ஓய்.எ.ம்.சி.ஏ., பள்ளி, நெய்வேலி என்.எல்.சி., பள்ளி, புதூர் அரசு
மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் செல்வம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, ஈரோடு, திருவண்ணாமலை, சென்னை பாரதி வித்யாபவன், ஈரோடு செல்வம் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில் ஆகிய இடங்களில், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, ஈரோடு, திருவண்ணாமலை, சென்னை பாரதி வித்யாபவன், ஈரோடு செல்வம் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில் ஆகிய இடங்களில், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு, 2014-15ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கு
மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது. தடகளம், இறகுபந்து, கூடைபந்து, குத்து
சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள் சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து,
ஹாக்கி, நீச்சல், டேக்வாண்டா, வாலிபால், பளுதூக்குதல் போட்டிகள் குறித்து
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாள் சண்டை, கைப்பந்து, ஹாக்கி,
டென்னிஸ், வாலிபால், பளுதூக்குதல் போட்டிகளுக்கு, மாணவிகளுக்கு பயிற்சி
அளிக்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள
மாணவ, மாணவிகள், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அரங்கில் உள்ள மாவட்ட
விளையாட்டு அலுவலகத்தில், விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம்.
மேலும் விவரம் அறிய, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் தொடர்பு
கொள்ளலாம். விண்ணப்பங்களை, வரும், 25ம் தேதிக்குள் அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும்" என்றார்.