தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்
சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால அறிவியல் முகாம் ஏப்ரல் 12 முதல் 14
ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த ஆண்டு 7, 8, 9-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
சென்னை கோட்டூர்புரம் காந்திமண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இந்தப் பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4.30
மணி வரை நடைபெறும்.
இந்த முகாமில் இயற்பியல், வேதியியல், கணிதம், வானவியல்,
சுற்றுச்சூழலியல், யோகா, உளவியல், வானத்தை ஆய்வு செய்தல் தொடர்பாக பல்வேறு
விரிவுரைகள் வழங்கப்படும். இந்த முகாமில் மொத்தம் 50 இடங்களே உள்ளன.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடம் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 24410025 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.