மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சையில் உள்ள பெண்
ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணி வழங்க கூடாது என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் அவர்கள்
கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தேர்தல்
பணியில் பெண் ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர். மகப்பேறு காலத்தில்
உள்ள பெண் ஆசிரியர்கள், ஒரு வருட கைக்குழந்தை வைத்துள்ள பெண் ஆசிரியர்கள்,
அறுவை சிகிச்சையில் உள்ளவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை
தேர்தல் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.மேலும் ஆசிரியர்கள், அவர்கள்
பணியாற்றி வரும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலோ அல்லது அருகில் உள்ள
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலோ தேர்தல் பணியாற்ற ஆணை வழங்க வேண்டும்.