தற்போது, தமிழ் பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் விடைத்தாள் வீதம் திருத்தப்படுகிறது. ஆசிரியர்கள் விடைத்தாள்களை திருத்திய பின், மதிப்பெண்களை சரிபார்க்க, தனியாக அலுவலர்களை, தேர்வுத்துறை இயக்குனரகம் இந்த ஆண்டு முதல் நியமித்துள்ளது. இவர்கள், அனைத்து விடைத்தாள்களையும் சரிபார்ப்பதற்குள் கால தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, மதிப்பெண் பட்டியலை சரிபார்க்க, கூடுதலாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் என்.இளங்கோ கூறுகையில்,"" மதிப்பெண் பட்டியல் சரிபார்க்கும் அலுவலர்கள், அனைத்து விடைதாள்களையும் சரிபார்க்கவேண்டும். இதனால், கூடுதல் நேரமாகிறது. இதை தவிர்க்க, கூடுதல் அலுவலர்களை நியமிக்கவேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்,'' என்றார்.