பிளஸ்
2 தேர்ச்சி விகிதம் குறைந்ததால், கன்னியாகுமரி
மாவட்டத்தில் ரசுப் பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் 3 பேர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது; மேலும் 12 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை
வெளியிடப்பட்டன. குமரி மாவட்டத்தின் தேர்ச்சி
95.14 சதவீதம். இது, கடந்த ஆண்டைவிட
1.11 சதவீதம் அதிகம். இந்நிலையில், தேர்ச்சி
விகிதம் குறைந்த பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் பாடவாரியாக தேர்ச்சி
விகிதம் குறைந்த ஆசிரியர்கள் மீது
திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிளஸ்
2 தேர்வில் இரணியல் அரசு மேல்நிலைப்
பள்ளி 68.36 சதவீதமும், படந்தாலுமூடு டி.சி.கே.
மேல்நிலைப் பள்ளி 61.76 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது. இதையடுத்து, இரணியல் பள்ளித் தலைமை
ஆசிரியை லீலாவதி, படந்தாலுமூடு பள்ளித் தலைமை ஆசிரியர்
(பொறுப்பு) கிருஷ்ணதாஸ் ஆகியோர் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை ஆசிரியை லீலாவதி கடந்த
மாதம் பணியில் இருந்து ஓய்வு
பெற்றார்; அவருக்கு மே மாதம் வரை
பணி நீடிப்பு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பளுகல் அரசு மேல்நிலைப்
பள்ளி 78.9 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்
சசிதரன் தலைமை ஆசிரியர் பொறுப்பில்
இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்,
பாடவாரியாக 60 சதவீதத்துக்கு குறைவான தேர்ச்சி விகிதத்தைக்
கொடுத்த 12 ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மாவட்ட
ஆட்சியரின் அறிவுரையின்பேரில், இந்த நடவடிக்கையை முதன்மை
கல்வி அலுவலர் எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்
இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டனம்: தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்
மீதான நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொருளாளர்
வள்ளிவேலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
பிளஸ் 2 தேர்வில் குமரி மாவட்டம் 95.14 சதவீதம்
தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில்,
ஒரு சில பள்ளிகளில் தேர்ச்சி
விகிதம் குறைய ஆசிரியர்கள் காரணம்
எனக் கூறி 3 தலைமை ஆசிரியர்கள்,
12 முதுநிலை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து
இருப்பதை ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கண்டிக்கிறது.
இப்பிரச்னையில்
தமிழக முதல்வர் தலையிட்டு, ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து
செய்யவேண்டும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க
பள்ளிக் கல்வி இயக்குநரகமோ, பள்ளிக்
கல்வித் துறையோ எந்த உத்தரவும்
பிறக்காத நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில்
முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை
எடுத்து இருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.