சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி
வேளாண் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14)
தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.அண்ணாமலைப் பல்கலைக்கழக பிஎஸ்சி வேளாண்மை, பிஎஸ்சி தோட்டக்கலை
படிப்புகளுக்கு ஜூலை 14, 15, 16 தேதிகளிலும், பிபிடி, பி.பார்ம் மற்றும்
பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 17-ஆம் தேதியும் கலந்தாய்வு
நடைபெறுகிறது.
பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் உள்ள சாஸ்திரி ஹாலில் கலந்தாய்வு
நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் பல்கலைக்கழக இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
இவை அல்லாது விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு குறித்து
விரைவு அஞ்சல் மூலமும் அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்எம்எஸ் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக
நிர்வாகம் தெரிவித்துள்ளது.