ஒட்டு மொத்த ஆசிரியர்களும் சமுதாயத்தின் உதாரணங்கள் என்பதை மெய்பிக்கும் வகையில் உள்ள இந்த ஆசிரியரின் செயலை கல்விக்குரல் உள்ளம் நெகிழ பாராட்டுகிறது:
கடலூர்
மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பரிபூரணநத்தம்
கிராமத்தைச் சேர்ந்தவர் உ.கருணாகரன் (30). இவர்
வாழைக்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியராக
பணியாற்றுகிறார். இவர் வியாழக்கிழமை காலை
சேத்தியாத்தோப்பு கடைவீதியில் உள்ள தனியார் வங்கியில்
அப்போது
கடைவீதியில் சாலையோரம் கீழே 41 கிராம் தங்க
செயினை கிடப்பதை பார்த்து, அதனை எடுத்து சேத்தியாத்தோப்பு
காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் கே.அம்பேத்கரிடம் அளித்து, நகைக்கு உரியவரை கண்டுபிடித்து
வழங்குமாறு தெரிவித்துள்ளார். ஆசிரியரின் நேர்மையையும், கடமை உணர்வையும் இன்ஸ்பெக்டர்
அம்பேத்கர் பாராட்டி, நிச்சயம் இவரால் சிறந்த மாணவர்கள்
உருவாக்கப்படுவார்கள் என தெரிவித்தார். இந்நிலையில்
இன்ஸ்பெக்டர் நகை கண்டெடுத்த விபரத்தை
பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். நகையை தவறவிட்டு அலைந்து
கொண்டிருந்த வலசக்காடு கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன், சேத்தியாதோப்பு
ஆட்டோ நிறுத்தத்தில் சென்று கேட்டுள்ளார். அப்போது
அவர்கள் பேஸ்புக்கில் இன்ஸ்பெக்டர் நகை கண்டெடுத்த விபரத்தை
வெளியிட்டுள்ளார். எனவே அவரை சென்று
பார்க்கவும் எனக்கூறியுள்ளனர். பின்னர் மதிவாணன் சேத்தியாத்தோப்பு
காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரை சந்தித்து
தவறவிட்ட நகையை பெற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி
தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநராக
உள்ள மதிவாணன் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் வங்கியில்
நகையை அடமானம் வைக்க வந்த
போது தவறவிட்டுள்ளார். அப்போது நகையை மீட்க
அங்கு வந்த அரசு பள்ளி
ஆசிரியர் கருணாகரன் அதனை கண்டெடுத்து காவல்துறையினரிடம்
வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.