கடலுார் பெரியார் அரசு கலைக் கல்லுாரி மாணவ, மாணவியர் 9 பேர் திருவள்ளுவர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளனர்.கடலுார்,
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தனியார்
மற்றும் அரசு கல்லுாரிகள் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் கீழ் 180
கல்லுாரிகள் இயங்குகின்றன.இதில் கடலுார் பெரியார் அரசு கலைக்
கல்லுாரியைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் 8 மாணவியர் பல்கலைக்கழக அளவிலான
தேர்வில் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதில் பொருளியல் துறை
மாணவி தேவிகா 6.453 சதவீதம் பெற்று 6ம் இடத்தையும்; பி.எஸ்சி., தொழிற்சாலை
வேதியியல் பாடத்தில் மாணவர் சதீஷ் 7.174 சதவீதம் பெற்று முதல் இடத்தையும்;
எம்.ஏ., பொருளியல் பாடத்தில் மாணவி கலைமதி 6.925 சதவீதம் பெற்று 4ம்
இடத்தையும்; மோகன லட்சுமி 6.888 சதவீதம் பெற்று 6ம் இடத்தையும்; எம்.ஏ.,
தமிழ்ப் பாடத்தில் இளையராணி 7.516 சதவீதம் பெற்று 9ம் இடத்தையும் பெற்றனர்.
எம்.எஸ்சி.,
உயிரியியல் பாடத்தில் மாணவி இந்துமதி 8.331 சதவீதம் பெற்று முதல்
இடத்தையும்; மாணவி ஆதிலட்சுமி 8.17 சதவீதம் பெற்று 3ம் இடத்தையும்; மாணவி
ஜானகி 8.1 சதவீதம் பெற்று 4ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சாதனை மாணவிகளை கல்லுாரி முதல்வர்,
பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வாழ்த்தினர்.