இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம்,
தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன.
இவற்றில் தற்போதைய நிலவரப்படி, சுமார் 1.32 கோடிக்கும் அதிகமான (86
சதவீதம்) வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.
சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் இன்னும் இத் திட்டத்தில் இணையவில்லை.
அவர்களையும் இத்திட்டத்தில் இணைக்க தற்போது எரிவாயு
உருளை விநியோக ஊழியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே,
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்கள் இந்தத்
திட்டத்தில் இணைய மார்ச் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.
கால அவகாசம்: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நேரடி மானியத்
திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு மானியமில்லாத விலையில் எரிவாயு
உருளைகள் வழங்கப்படும். அதாவது, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது
நிர்ணயிக்கும் மானியம் இல்லாத விலையில் மட்டுமே ரசீதுகள் இனி
அளிக்கப்படும்.
எனினும், நேரடி மானியத் திட்டத்தில் இதுவரை சேராத
வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இத் திட்டத்தில்
இணைய கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் நேரடி மானியத் திட்டத்தில் சேர
விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் திட்டத்தில் இணைந்த பிறகு
மானியத் தொகை வழங்கப்படும். நேரடி மானியத் திட்டத்தில் சேரும் வரை, இத்தகைய
வாடிக்கையாளர்களின் மானியத் தொகை எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் இருப்பு
வைக்கப்பட்டு வழங்கப்படும்.
ஆதார் அட்டை கட்டாயமில்லை: ஆதார் அட்டை இல்லாதவர்களும்,
ஆதார் அட்டை உள்ளவர்களும் நேரடி மானியத் திட்டத்தில் சேர முடியும்.
இத்தகையோர் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள், வங்கிகளிடம் விண்ணப்பங்களைச்
சமர்ப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கிகள் இன்று செயல்படும்
அனைத்து வங்கிகளும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) செயல்படும். எனவே, நேரடி மானியத் திட்டத்துக்கான விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிய வங்கியில் செவ்வாய்க்கிழமை அளிக்கலாம். ஏப்ரல் 1, 2, 3 ஆகிய 3 நாள்கள் மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறையாகும். ஏப்ரல் 4-ஆம் தேதி வங்கிகள் செயல்படும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து வங்கிகளும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) செயல்படும். எனவே, நேரடி மானியத் திட்டத்துக்கான விண்ணப்பத்தை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிய வங்கியில் செவ்வாய்க்கிழமை அளிக்கலாம். ஏப்ரல் 1, 2, 3 ஆகிய 3 நாள்கள் மட்டுமே வங்கிகளுக்கு தொடர் விடுமுறையாகும். ஏப்ரல் 4-ஆம் தேதி வங்கிகள் செயல்படும் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.