அக்னி-3 ஏவுகணை
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் அக்னி வரிசை ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தயாரிக்கப்பட்டு உள்ள அக்னி-3 ரக ஏவுகணைகள் ஏற்கனவே இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.
நடமாடும் செலுத்து வாகனம்
அங்கு நடமாடும் செலுத்து வாகனத்தில் இருந்து அக்னி-3 ஏவுகணை செலுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை ஏவுகணை துல்லியமாக சென்று தாக்கியது.
இந்த நடவடிக்கையின் போது பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த நவீன ரேடார் கருவிகள் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டது. மேலும் கடலில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பல்களில் உள்ள நவீன கருவிகள் மூலமும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டது. இந்த பரிசோதனைக்கான அனைத்து உதவிகளையும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் வழங்கினர்.
அணு ஆயுதங்கள்
17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்ட அக்னி-3 ஏவுகணைகள் 2 பிரிவுகளை கொண்ட திட எரிபொருள் என்ஜினால் இயக்கப்படுகிறது.
சுமார் 50 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை 1.5 டன் எடை கொண்ட வெடிபொருள் அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகும். மேலும் 3 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தவை ஆகும்.
பலகட்ட சோதனைகள்
இந்த ஏவுகணை முதன் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி சோதித்து பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது எதிர்பார்த்த அளவு வெற்றியை தராத இந்த ஏவுகணை, பின்னர் 2007 (ஏப் 17), 2008 (மே 7), 2010 (பிப் 7) ஆகிய ஆண்டுகளில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
மேலும் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 21 மற்றும் 2013 டிசம்பர் 23-ந்தேதிகளில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போதும் அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமான முடிவை கொடுத்தது.








