மானியம், கல்வி உதவித் தொகைகளை
நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலான பொது நிதி
மேலாண்மைத் திட்டத்தில் இணைப்பு பெற்றுள்ளதை பல்கலைக்கழகங்கள்
உறுதிப்படுத்துமாறு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
அறிவுறுத்தியுள்ளது.
அவ்வாறு பொது நிதி மேலாண்மைத் திட்டத்தில்
(பி.எஃப்.எம்.எஸ்.) இணையாத பல்கலைக்கழகங்களுக்கு மானியங்கள்
விடுவிக்கப்படாது எனவும் யுஜிசி அறிவித்துள்ளது.
முறைகேடுகளைத் தடுக்கவும், உதவித் தொகைகள் முழுமையாகப்
பயனாளிகளுக்குச் சென்றடையும் வகையிலும் மத்திய அரசு நேரடி மானியத்
திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளின்
வங்கிக் கணக்குக்கே மானியத் தொகை செலுத்தப்பட்டு விடும்.
இதுபோல, பல்கலைக்கழக மானியக் குழுவும் கல்வி உதவித்
தொகைகளை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே அனுப்பி வருகிறது.
இதற்காக பொது நிதி மேலாண்மைத் திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்தது.
இப்போது கல்வி உதவித் தொகை மட்டுமல்லாமல்,
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகைகளையும்
(மானியம்) இந்த பொது நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொண்டுவர யுஜிசி
முடிவு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
யுஜிசி-யிடம் மானியம் பெறும் அனைத்துப்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைப் பொது நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ்
கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பல்கலைக்கழகங்கள் இந்தத் திட்டத்தில் பதிவு
செய்துள்ளதை வரும் 30-ஆம் தேதிக்குள் ன்ஞ்ஸ்ரீ.ல்ச்ம்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம்
என்ற மின்னஞ்சல் முகவரியில் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு இந்தத் திட்டத்தில் இணையாத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மானியங்கள் விடுவிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.