பி.எப்., மண்டல ஆணையர் பிரசாத் தொழிலதிபர்களுக்கு விடுத்துள்ள
வேண்டுகோள்:பி.எப்., திட்டத்தில், தொழிலாளர்கள் உறுப்பினரான, ஒரு
மாதத்துக்குள், உறுதி படிவத்தை பெற்று, 25 நாட்களுக்குள், நிரந்தர எண் பெற
பதிவு செய்ய வேண்டும்.நிரந்தர பி.எப்., எண்
அளிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, அவற்றை 15 நாட்களுக்குள் பயன்படுத்த
அறிவுறுத்தி, அதற்கான ஒப்புதலை பெற வேண்டும்; அவர்களின், ஆதார் மற்றும்
பான் எண்களை, பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாத தொழிலாளர்களிடம்,
அதற்கான ஒப்புகையைப் பெற வேண்டும். இத்தகவல்கள் அனைத்தையும், பி.எப்.,
அலுவலகத்தில் தொழிலதிபர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு,
தொழிலதிபர்கள் செலுத்தும் பங்கு தொகையை, இணையதள வங்கி சேவை மூலமே செலுத்த
வேண்டும்.
1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பங்களிப்புள்ள
நிறுவனங்கள், 2015 செப்டம்பர் வரை, காசோலை மூலம், பங்களிப்பு தொகையை
செலுத்தலாம். அதன்பின், இணையதள வங்கி சேவை மூலமே அவர்களும் பங்களிப்பு
தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.