தமிழகத்தில் ரூ.72.93 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின
மாணவ-மாணவியர் விடுதிக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள ஆதிதிராவிடர்,
பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், கல்வி வளர்ச்சியையும்
மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை
எடுத்து வருகிறது.இதற்கான நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
அந்த வகையில், புதுக்கோட்டை கறம்பக்குடியில் 50 பேர் தங்குவதற்கு ஏற்ப ரூ.1 கோடியில் கட்டப்பட்ட மாணவியர் விடுதி, திருப்பூர், கோவை மாவட்டம் (கோவை, காடாம்பாறை, சின்னத்தடாகம், எஸ்.புங்கம்பாளையம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, சேலம் (சேலம் மாநகர், சேலம் சட்டக் கல்லூரி, கொளத்தூர், அரகலூர், தலைவாசல், நெய்யமலை, மண்ணூர், நாமக்கல் (நாமக்கல், நாமகிரிப்பேட்டை, செங்கரை-1,2), தருமபுரி (தருமபுரி, பே.தாதம்பட்டி, மொரப்பூர், காளிப்பேட்டை, அனுமந்தபுரம், சித்தேரி-1, 2, திண்டுக்கல் (கீரனூர், கள்ளிமந்தையம், பழனி) ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதிக் கட்டடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், காஞ்சிபுரம் (செய்யூர், நாகல்கேணி, மதுராந்தகம், தையூர்), திருவள்ளூர் (ஈக்கூவார்பாளையம்), திருவண்ணாமலை (கொளப்பலூர், மேலராணி, செங்கம், காஞ்சி, கலசப்பாக்கம்), திருவாரூர் (திருவாரூர்-1,2, திருத்துறைப்பூண்டி, சவளக்காரன், வேலூர் (பானாவரம், குடியாத்தம், ஆற்காடு), பெரம்பலூர், நெய்குப்பை, திருச்சி (திருச்சி கண்டோன்மென்ட், பொய்கைப்பட்டி, வாளசிராமணி, கானக்கிளியநல்லூர், திம்மராயசமுத்திரம்), ராமநாதபுரம் (ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி), விருதுநகர் (மல்லாங்கிணறு, காரியாப்பட்டி, தஞ்சாவூர் (பேராவூரணி) ஆகிய இடங்களிலும் விடுதிக்கான கட்டடங்களை அவர் திறந்துவைத்தார்.
நாகை (வெட்டியகாடு), புதுக்கோட்டை (புதுக்கோட்டை, ரகுநாதபுரம், ஒக்கூர், கீரனூர், பி.அழகாபுரி, மேலத்தானியம், வல்லத்திராக்கோட்டை, விராலிமலை), கிருஷ்ணகிரி கல்லாவி, விழுப்புரம் (செவலப்புரை, செஞ்சி, கப்பூர், கண்டமங்கலம்), திருநெல்வேலி (தென்மலை, ராதாபுரம், விஸ்வநாதப்பேரி, அம்பாசமுத்திரம்), சிவகங்கை (சித்தலூர், இளையான்குடி, வேதியரேந்தல்), தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், அரியலூர் திடீர்குப்பம், கரூர் கொசூர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர், பவானி ஆகிய இடங்களில் விடுதிக் கட்டடங்களையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் (இரும்பேடு), கடலூர் (சிறுமங்கலம்), கரூர் சின்னம்மநாயக்கன்பட்டி, கோவை மாவுத்தம்பதி ஆகிய இடங்களில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகக் கட்டடங்கள், பல்வேறு இடங்களில் 24 சமுதாயக் கூடங்கள் என மொத்தம் ரூ.72.93 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களை அவர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் என்.சுப்பிரமணியன், சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.