இதையடுத்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடனடியாக வந்து சேர்க்கைக் கடிதத்தை பெற்றுச் சென்றனர்.
40 அலுவலர்கள்: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். கலந்தாய்வில் தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதத்தை தொடர்ந்து இரவு பகலாக அளிக்கும் பணியில் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சேர்ந்த 40 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சேர்க்கைக் கடிதத்தை அளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) உள்பட வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.
மருத்துவக் கல்லூரிகள் ஆயத்தம்: சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள், உரிய அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் (அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள்), சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி (அரசு பி.டி.எஸ். இடம்) ஆகியவற்றுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் சென்று சேர்க்கைக் கடிதத்தைக் காட்டி சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சேர்க்கைக் கடிதத்தைப் பெறும் மாணவர்கள் வரும் ஜூலை 2-ஆம் தேதிக்குள் உரிய மருத்துவக் கல்லூரியில் சேருவது அவசியம் என்றார் எஸ்.கீதாலட்சுமி.








