சார்க் நாடுகளுக்கு தகவல்தொடர்பு, கல்வி, டெலி-மெடிசின் மற்றும் பேரழிவு கண்காணிப்பு சேவைகளை வழங்குவதற்காக இந்த செயற்கைக்கோள் 12 கே.யூ பேண்டு டிரான்ஸ்பான்டர்களுடன் விண்ணில் ஏவப்படுகிறது.
சார்க் செயற்கைக்கோளில் அண்டை நாடுகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய அந்நாடுகள் கிரவுண்ட் ஸ்டேஷனில் டெலி-கனெக்டிவிட்டி மற்றும் டி.டி.எச் வசதிகளை பெறும் வகையில் சில அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த சார்க் செயற்கைகோளை உருவாக்க 18 மாதங்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள மையத்தில் வைத்து தயாரிக்கப்பட உள்ள இந்த செயற்கைகோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் எனவும் இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.








