சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக
விளையாட்டு மைதானத்தில் பல்கலைக்கழக யோகா மையம் மற்றும் தேசிய மாணவர் படை
சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சுமார் 2500 பேர் பங்கேற்ற மெகா
யோகா கூட்டுப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
யோகா தினத்தை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரை
அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மெகா யோகா கூட்டு பயிற்சி
நடைபெற்றது. இப்பயிற்சியில் அனைத்து பள்ளி மாணவ, மாணவியர்கள், பல்கலைக்கழக
மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் யோகா அமைப்புகள் பங்கேற்றன. தேசிய
மாணவர் படையைச் சேர்ந்த 936 மாணவர்கள் உள்ளிட்ட 2600 பேர் மெகா
கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றனர். பயிற்சியை யோகா மைய உதவிப் பேராசிரியர்
வெங்கடாஜலபதி ஒருங்கிணைத்து நடத்தினார்.
மெகா யோகா பயிற்சியை திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தர் எல்.கண்ணன் தொடங்கி வைத்துப் பேசினார். அறிவியல் புல முதல்வர்
எம்.சபேசன் தொடக்கவுரையாற்றினார. கல்விப்புல முதல்வர் ஆர்.பாபு தலைமை
வகித்தார். யோகா மைய இயக்குநர் வி.சுரேஷ், கல்வியல்துறை தலைவர்
ஹரிகிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழக புல முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ,
மாணவியர்கள் பங்கேற்றனர். பின்னர் யோகா மையத்தில் யோகா சிறப்பு
கருத்தரங்கமும், மாலை யோகா கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முன்னதாக உலக யோகா தினத்தை முன்னிட்டு அண்ணாமலைப்
பல்கலைக்கழக ராஜா முத்தையா அரங்கில் யோகா கண்காட்சி ஜூன் 20-ம் தேதி
சனிக்கிழமை தொடங்கி ஜூன் 22-ம் தேதி திங்கள்கிழமை வரை மூன்று நாட்கள்
நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் யோகா நூல்கள், சிடிக்கள் ஸ்டால்கள் மற்றும்
ஈஷா யோகா, பிரம்மகுமாரிகள், வாழும் கலை அமைப்பு, இயற்கை உணவகம் ஆகிய
அமைப்புகளின் ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. கல்விப்புல முதல்வர் ஆர்.பாபு
கண்காட்சியை தொடங்கி வைத்தார் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.