நிகழ்ச்சியில், ஆதிபராசக்தி மருத்துவமனை, ஆராய்ச்சி மைய நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ், ஆதிபராசக்தி பராமெடிக்கல்ஸ் கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஸ்ரீலேகா செந்தில்குமார், ஆதிபராசக்தி உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், ஜி.பி. பப்ளிக் பள்ளி முதல்வர் எஸ்.சி.பெர்னான்டஸ், ஆதிபராசக்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாலசந்தர், அன்னை இல்லம் ஒருங்கிணைப்பாளர் தினகர், ஆதிபராசக்தி பள்ளிக் குழுமங்களின் நிர்வாக அலுவலர் ஏ.விஜயரகுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், மேல்மருவத்தூர், அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், பள்ளிகளின் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.