மருத்துவ
படிப்பிற்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கலந்தாய்வு
நடைபெறும் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் கலந்தாய்வுக்காக
மாணவர்கள், பெற்றோர்கள் உட்கார வசதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்பான ஏற்பாடு
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் 2015-16-ம் ஆண்டிற்கான மருத்துவ கல்வி பட்டப்படிப்பு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவபடிப்பு (பி.டி.எஸ்.) சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்குகளில் நடைபெறவுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களின்
வசதிக்காக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில்
உள்ள இரு கூட்ட அரங்குகளில் கலந்தாய்வு நடத்திட சிறப்பான ஏற்பாடுகள்
முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிறப்பான ஏற்பாடு
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் 2015-16-ம் ஆண்டிற்கான மருத்துவ கல்வி பட்டப்படிப்பு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவபடிப்பு (பி.டி.எஸ்.) சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்ட அரங்குகளில் நடைபெறவுள்ளது.
பந்தல், சிற்றுண்டி வசதி
கூட்ட அரங்குகளில் மிகப்பெரிய அளவில் 4 எல்.இ.டி. திரைகளும், அரங்கிற்கு வெளியே 4 எல்.இ.டி திரைகளும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமரும் கூடத்தில் 4 எல்.இ.டி திரைகளும் மொத்தம் 12 எல்.இ.டி திரைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும் மாணவர்கள் வரைவோலை எடுக்கவும், பணம் செலுத்தவும் தற்காலிகமாக கணினி மயமாக்கப்பட்ட வங்கி வசதியும் செய்யப்படவுள்ளது. ஒரே நேரத்தில் 5 மாணவர்கள் அமர்ந்து தங்களின் கல்லூரியை தேர்வு செய்ய ஏதுவாக 5 கணினிகளும் அமைக்கப்படவுள்ளது.
மேலும் மாணவர்கள் மற்றும் மாணவர்களுடன் வரும் பெற்றோர்கள் அமர்வதற்கு மருத்துவமனையின் வெளிப்பகுதியில் மிகப்பெரிய பந்தல், 4 எல்.இ.டி திரை வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதி, சிற்றுண்டி விடுதி ஆகிய வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
அமைச்சர், அதிகாரிகள்பார்வையிட்டனர்
சென்ற ஆண்டு வரை இந்த கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டும், கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வசதிகளை கருத்தில் கொண்டும் இவ்வாண்டிற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்குகளில் சிறப்பான ஏற்பாடுகளுடன் நடத்தப்படவுள்ளது.
கலந்தாய்வுக்கான முன் ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். கீதாலட்சுமி மற்றும் தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் ஆகியோர் பார்வையிட்டனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.