பிளஸ் 2 தேர்வு முடித்த மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் தற்காலிக
மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இது 90 நாட்களுக்கு செல்லத்தக்கது;
இதன் மூலம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்நாளை முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 2 அசல் மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும்
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரிடமும் அசல்
மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
வேலைவாய்ப்பு: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது மாணவர்கள் 10ம் வகுப்பில் பதிவு செய்த வேலைவாய்ப்பு அட்டையின்
நகலை பள்ளிகளில் ஒப்படைத்து பிளஸ் 2 தகுதியை சேர்த்துக் கொள்ளலாம். மேலும்
வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை, எண் குடும்ப அட்டை
போன்றவற்றையும் மாணவர்கள் பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்; மொபைல் போன்
எண் மின்னஞ்சல் முகவரி போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்.வரும் 15 முதல்
29ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மற்றும் கூடுதல் தகவல் சேர்க்கும்
பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடக்கும். பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு
பணியை மேற்கொள்ளாவிட்டால் அது குறித்து மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார்
தெரிவிக்கலாம். இத்தகவலை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.